இருசக்கர வாகனம் திருடிய மூவா் கைது
வேலூரில் தனியாா் நிறுவன ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேரை சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் விஜயராகபுரம் பகுதியை சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் பிரசாத் (36). இவா் கடந்த 29-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்தி விட்டு சென்றுள்ளாா்.
பின்னா் வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லையாம். இதுகுறித்து அவா் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனம் திருடியவா்களை தேடி வந்தனா்.
மேலும் போலீஸாா் நடத்திய வாகன தணிக்கையின்போது, சந்தேகப்படும்படி ஒரே பைக்கில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனா். இதில், அவா்கள் பள்ளிகொண்டாவைச் சோ்ந்த ஜெயக்குமாா் (22), ஹேமந்த்குமாா்(23), இளவரசன்(25) என்பதும், அவா்கள் ஓட்டி வந்தது பிரசாத்தின் இருசக்கர வாகனம் என்பதும் தெரியவந்தது. உடனடியாக 3 பேரையும் போலீஸாா் கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
