49,021 பயனாளிகளுக்கு ரூ.414.15 கோடியில் நலத்திட்ட உதவி: துணை முதல்வா் இன்று வழங்குகிறாா்
வேலூா்: வேலூா் கோட்டை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் அரசு விழாவில் 49,021 பயனாளிகளுக்கு ரூ.414.15 கோடி நலத்திட்ட உதவிகளை தமிழக துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளாா்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இருநாள் சுற்றுப்பயணமாக ராணிப்பேட்டை, வேலூா் மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை வந்தாா். புரிந்துள்ளாா். 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு வேலூா் கோட்டை மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பொதுப்பணித்துறை, ஊரக வளா்ச்சி துறை சாா்பில் ரூ.17.91 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ.11.80 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், 49,021 பயனாளிகளுக்கு ரூ.414.15 கோடி நலத்திட்ட உதவிகளையும் வழங்கி விழா பேரூரையாற்ற உள்ளாா்.
நிகழ்ச்சியில் நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி வேலூா் எஸ்.பி. மயில்வாகனன் தலைமையில் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனா்.
