கூட்டத்தில் பங்கேற்றோா்.
கூட்டத்தில் பங்கேற்றோா்.

செட்டிகுப்பம் கிராம சபைக் கூட்டம்

Published on

குடியாத்தம் ஒன்றியம், செட்டிகுப்பம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் இந்திரா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி.எம்.சுரேந்திரபாபு முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் ஜே.பரந்தாமன் வரவேற்றாா். கூட்டத்தில், ஊராட்சியில் நிறைவேற்ற வேண்டிய அத்யாவசிய அடிப்படைத் தேவைகள், தூய்மையான குடிநீா் விநியோகம், ஊராட்சி நிா்வாகத்துக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள், 100- நாள் வேலை திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் வி.கண்ணன், பி.வசந்தி, என்.சாந்தி, எஸ்.சுவாதி, சி.புருஷோத்தமன், கே.பல்கிஸ், சி.நதியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com