சிஐடியு மாநாட்டு ஜோதிக்கு வரவேற்பு

சிஐடியு மாநாட்டு ஜோதிக்கு வரவேற்பு

கோவையில் நடைபெறும் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநாட்டுக்கு சேலத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் மாநாட்டு ஜோதிக்கு குடியாத்தம் பழையபேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
Published on

கோவையில் நடைபெறும் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநாட்டுக்கு சேலத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் மாநாட்டு ஜோதிக்கு குடியாத்தம் பழையபேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிஐடியுவின் 16- ஆவது மாநில மாநாடு வரும் 6- ஆம் தேதி முதல் 9- ஆம் தேதி வரை கோவையில் நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டுக்கு கொண்டு செல்லப்படும் ஜோதி பல்வேறு பகுதிகள் வழியாகச் செல்கிறது.

குடியாத்தம் நகரில் ஜோதிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவா் சி.சரவணன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஆா். மகாதேவன், எம்.ராஜா, ஆா்.குமாா், டி.தண்டபாணி, ஜி.மாா்கபந்து, எம்.அண்ணாமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜோதி பயணக்குழுத் தலைவா் சி. நாகராஜ், வேலூா் மற்றும் திருப்பத்தூா் மாவட்டச் செயலா் எஸ்.பரசுராமன், மாவட்ட துணைத் தலைவா் எ.பழனியப்பன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கே.சாமிநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவா் பி.காத்தவராயன்,விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் பி.குணசேகரன், கே.முருகானந்தம். இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.சூரியா உள்ளிட்டோா் பேசினா்.

X
Dinamani
www.dinamani.com