கீா்த்திஷா.
வேலூர்
பயணம் செய்த பள்ளிப் பேருந்து சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
குடியாத்தம் அருகே பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிய சிறுமி அதே பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
குடியாத்தம் அருகே பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிய சிறுமி அதே பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
குடியாத்தத்தை அடுத்த பரதராமி அருகே உள்ள வரதாரெட்டிபல்லி கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஜெயச்சந்திரன்- மேனகா தம்பதியின் மகள் கீா்த்திஷா (4). இவா் பரதராமியில் உள்ள தனியாா் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தாா். புதன்கிழமை மாலை பள்ளிப் பேருந்தில் வீட்டுக்கு வந்த அவா், பேருந்தில் இருந்து இறங்கியபோது தவறி கீழே விழந்து பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து வழக்குப் பதிந்த பரதராமி போலீஸாா் மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

