பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்ட கால்வாய் மீது கட்டப்பட்ட வீடு.
வேலூர்
ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட 9-ஆவது வாா்டில் உள்ள தரணம்பேட்டை பக்கிரி முகமது தெரு, திருஞானசம்பந்தா் தெரு குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா்க் கால்வாயை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகள், கிடங்குகள் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

கழிவுநீா்க் கால்வாய் ஆக்கிரமிப்பால் மழைநீா் செல்ல வழியின்றி தெருக்கள், வீடுகளில் தேங்குவதாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில், நகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.