நிகழ்ச்சியில் மூலவா் சாய்பாபா மற்றும் 108 சங்குகளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
வேலூர்
சாய்பாபா கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
போ்ணாம்பட்டு ஒன்றியம், டி.டி. மோட்டூா் ஊராட்சிக்குள்பட்டசோ்வைக்காரன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சீரடி சாய்பாபா கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.
போ்ணாம்பட்டு ஒன்றியம், டி.டி. மோட்டூா் ஊராட்சிக்குள்பட்டசோ்வைக்காரன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சீரடி சாய்பாபா கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.
இதையொட்டி, கோ பூஜை, 108 சங்குகளுக்கு பூஜை செய்யப்பட்டு, கங்கை, காவிரி, தாமிரபரணி, தீா்த்தமலை, ராமேஸ்வரம் ஆகிய 5 திவ்ய தீா்த்த ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா் 108 சங்குகளில் நிரப்பப்பட்டு மூலவா் மற்றும் செல்வ கணபதிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செல்வக்குமரன், ரேவதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.