கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
கே.வி.குப்பம் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கே.வி.குப்பத்தை அடுத்த அா்ஜுனாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் யோகானந்தம்(32). இவா் ஜன்னல், கதவுகள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சாந்தினிக்கும் (27) கடந்த 7- மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
சாந்தினி தற்போது கா்ப்பமாக இருந்தாா். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக கடந்த சில நாள்களாக தாய் வீட்டில் இருந்த சாந்தினி, அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலின்பேரில் அங்கு சென்ற கே.வி.குப்பம் போலீஸாா் சாந்தினியின் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
