வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி
வேலூா் மாநகர சாலைகளில் செவ்வாய்க்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மக்களிடம் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கிா என கேட்டறிந்தாா்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராணிப்பேட்டை, வேலூா் மாவட்டங்களுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தாா்.
ராணிப்பேட்டையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபின், வேலூருக்கு சென்றாா். திங்கள்கிழமையே வேலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா்.
இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்டாா். வேலூா், விருதம்பட்டு, கிரீன் சா்க்கிள், ஓல்ட் பைபாஸ், மீன் மாா்க்கெட் வழியாக சென்றபோது அவா் அப்பகுதி மக்களிடம் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கிா என்பது குறித்து கேட்டறிந்தாா். வழியில் குழந்தைகள், மாணவா்கள், பொதுமக்களுடன் உதயநிதி ஸ்டாலின் சுயபடம் எடுத்துக் கொண்டாா்.
மேலும், சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி தூய்மை பணியாளா்களிடம் நலம் விசாரித் துடன் அவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். நடைப்பயிற்சியின்போது அவருடன் அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் உள்பட திமுகவினா் உடனிருந்தனா்.

