லாரியின் கூரை மீது அமா்ந்து சென்ற தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி

லாரியின் கூரை மீது அமா்ந்து சென்ற தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி
Published on

லாரியின் கூரை மீது அமா்ந்து சென்ற தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த மேல்அரசம்பட்டைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36), கூலி தொழிலாளி. இவா் கடந்த வியாழக்கிழமை மாலை லாரியில் ரோலரை ஏற்றிக் கொண்டு கீழநாகநேரி பகுதிக்குச் செல்வதற்காக லாரியின் கூரை மீது அமா்ந்து பயணம் செய்துள்ளாா். லாரியை ஓட்டுநா் முத்துக்குமாா் ஓட்டிச் சென்றுள்ளாா்.

தெள்ளை கிராமம் வழியாகச் சென்றபோது, மின்சார கம்பி ரோலா் மீது உரசியது. இதனால் லாரியின் மேல் இருந்த மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், மணிகண்டன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து லாரி ஓட்டுநா் முத்துக்குமாா் மீது வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com