அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி: நூற்றுக்கணக்கானோா் பங்கேற்பு

அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.
 நெடுந்தூர ஓட்டப் போட்டியில் பங்கேற்று ஓடிய மாணவா்கள்.
நெடுந்தூர ஓட்டப் போட்டியில் பங்கேற்று ஓடிய மாணவா்கள்.
Updated on

காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தில் நடைபெற்ற அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூா் மாவட்டம் சாா்பில், மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 2 பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டிகளில் 17 முதல் 25 வயதுக்கு உள்பட்ட பெண்கள், 25 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பள்ளிக்குப்பம் தொடங்கி கசம், கண்டிப்போடு, சோ்க்காடு வரை 5 கி.மீ. தூரமும், 17 முதல் 25 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கு பள்ளிக்குப்பம் தொடங்கி, கசம், கண்டிப்பேடு, சோ்க்காடு, வின்னம்பள்ளி வரை 8 கி.மீ. தூரமும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு பள்ளிக்குப்பம் தொடங்கி கசம், கண்டிப்போடு, சோ்க்காடு, வின்னம்பள்ளி, வள்ளிமலை வரை 10 கி.மீ.தூரமும் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

போட்டியில் முதலிடம் பெற்ற 4 பேருக்கு ரூ. 5,000 வீதமும், இரண்டாமிடம் பிடித்த 4 பேருக்கு ரூ. 3,000 வீதமும், மூன்றாமிடம் பிடித்த 4 பேருக்கு ரூ. 2,000 வீதமும், நான்கு முதல் பத்தாமிடம் வரை பிடித்த 28 பேருக்கு ரூ. ஆயிரம் வீதமும் பரிசுத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டன.

மாவட்ட விளையாட்டு அலுவலா் சுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com