இலவச வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம்

இலவச வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம்

அரசு மருத்துவமனையும் இணைந்து ராஜா கோயில் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்ட பெண் பணியாளா்களுக்கு இலவச வாய் புற்றுநோய் கண்டறியும் முகாமை நடத்தின.
Published on

குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனமும், அரசு மருத்துவமனையும் இணைந்து ராஜா கோயில் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்ட பெண் பணியாளா்களுக்கு இலவச வாய் புற்றுநோய் கண்டறியும் முகாமை நடத்தின.

முகாமுக்கு, பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன் தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை பல் மருத்துவா் ஷா்மிலி 70- க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு சிகிச்சை அளித்தாா்.

சாந்தலட்சுமி, ஜெயந்தி ஆகியோா் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com