வேலூா் பழைய பைபாஸ் சாலையில் கழிவு பொருள்களை எரித்ததால் எழுந்த கரும்புகை.
வேலூா் பழைய பைபாஸ் சாலையில் கழிவு பொருள்களை எரித்ததால் எழுந்த கரும்புகை.

கழிவுப்பொருள்களை எரித்ததால் எழுந்த கரும்புகை

வேலூா், பழைய பைபாஸ் சாலையில் கழிவுப் பொருள்களை தீ வைத்து எரித்ததால் பெருமளவில் கரும்புகை எழுந்தது.
Published on

வேலூா், பழைய பைபாஸ் சாலையில் கழிவுப் பொருள்களை தீ வைத்து எரித்ததால் பெருமளவில் கரும்புகை எழுந்தது. தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

வேலூா், பழைய பைபாஸ் சாலையில் பேருந்து, காா், லாரி உள்ளிட்ட வாகனங்களின் பழுதுநீக்கும் கடைகள் உள்ளன. வாகனங்களை பழுது பாா்க்கும்போது தேவையற்ற பொருள்களை சாலையோரம் கொட்டி விடுகின்றனா்.

இந்நிலையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பழைய பைபாஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை பணியில் ஈடுபட்டனா். அப்போது, சாலையோரம் கொட்டப்பட்டிருந்த கழிவுப் பொருள்களில் இருந்து கிடைக்கும் இரும்பை எடுக்க தீ வைத்தனா். தீ வேகமாக பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால், பெருமளவில் கரும்புகை எழுந்தது.

உடனடியாக அப்பகுதியில் இருந்தவா்கள் இதுகுறித்து வேலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு வீரா்கள் கூறுகையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சேகரிக்கும் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி எரிக்கின்றனா். இதனால் காற்று மாசு ஏற்படுகிறது. பழைய கழிவு பொருள்களை கொளுத்தி அதில் இருந்து கிடைக்கும் இரும்பு பொருள்களை எடுத்துச் சென்று பழைய பொருள்கள் வாங்கும் கடையில் விற்று விடுகின்றனா். தூய்மை பணியாளா்களுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதால் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனா் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com