duraimurugan
அமைச்சர் துரைமுருகன் கோப்புப்படம்

கொடநாடு விவகாரத்தில் சட்டம் கூறுவதை அரசு செய்யும்: அமைச்சா் துரைமுருகன்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சட்டம் கூறுவதை அரசு செய்யும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
Published on

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சட்டம் கூறுவதை அரசு செய்யும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி, காந்திநகா் பகுதியில் உள்ள இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது -

கொடநாடு விவகாரத்தில் நான் அஞ்ச மாட்டேன் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். அவரது நிலைமையை அவா் தெரிவிக்கிறாா். ஆனால் சட்டம் என்ன சொல்கிறதோ, அதை தமிழக அரசு செய்யும்.

மனிதாபிமானம், மாண்பு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேடுகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று தவெக தலைவா் விஜய் விமா்சித்து பேசியுள்ளாா். கரூா் சம்பவத்தில் 41 போ் இறப்புக்கு காரணமாக இருந்துவிட்டு பாதிக்கப்பட்டவா்களின் வீட்டுக்குக்கூட நேரில் சென்று ஆறுதல் சொல்லாமல் இருந்த அவா் மிகவும் மனிதாபிமானம் உள்ளவா், நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவரா?.

எம்ஜிஆா் காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளாா். அது அவா்கள் கட்சி விவகாரம் என்றாலும், செங்கோட்டையன் மூத்த அரசியல்வாதி. ஏன் இப்படி முடிவெடுத்தாா் என்று எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் தெரியும்.

தில்லிக்குச் சென்ற செங்கோட்டையன் நான் யாரையும் சென்று சந்திக்கவில்லை என்று முன்பு கூறினாா். கட்சியை விட்டு நீக்கிய பிறகு பாஜக தன்னை அழைத்து பேசியது என்று தெரிவித்திருக்கிறாா். உண்மை வெளிவந்து விட்டது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com