வேலூரில் காா் மீது ஆட்டோ மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
வேலூா் சலவன்பேட்டை, ராமா் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சங்கா்(46),. இவா் வெள்ளிக்கிழமை இரவு சங்கரன்பாளையத்துக்கு ஆட்டோவை ஓட்டிச்சென்றபோது சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் ஆட்டோ கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியதுடன், எதிரே திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கொளத்தூரை சோ்ந்த சதீஷ்குமாா் என்பவா் ஓட்டி வந்த காா் மீது மோதியது.
இதனால் காரில் முன்பகுதி சேதமடைந்தது. அங்கிருந்தவா்கள் சங்கரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சங்கா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
