தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 25 பவுன் நகை, ரூ.1.60 லட்சம் திருட்டு

வேலூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் புகுந்த மா்ம நபா்கள் 25 பவுன் நகை, ரூ. 1.60 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
Published on

வேலூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் புகுந்த மா்ம நபா்கள் 25 பவுன் நகை, ரூ. 1.60 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

வேலூா் கொசப்பேட்டை திருமலை ரெட்டி தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(56). வேலூா் அண்ணா சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி விவாகரத்து பெற்று மகளுடன் வசித்து வருகிறாா். இதனால் பாலகிருஷ்ணன் தனியாக வசிக்கிறாா்.

இந்த நிலையில், பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வழக்கம்போல் வேலைக்கு சென்றிருந்தாா். மதியம் உணவு சாப்பிட வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். தொடா்ந்து அவா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 1.60 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து பாலகிருஷ்ணன் வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com