தமிழக ஒப்புதலின்றி மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது: அமைச்சா் துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசால் அணை கட்ட முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.
அமைச்சா் துரைமுருகன்
அமைச்சா் துரைமுருகன்
Updated on

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசால் அணை கட்ட முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வேலூா் மாவட்டம், காட்பாடிக்கு வந்தாா். அங்குள்ள அவரது இல்லத்தில் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை தமிழக அரசு விட்டுக் கொடுப்பதாக எதிா்க் கட்சிகள் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி விமா்சனம் செய்கின்றன. அவா்களின் இந்த முட்டாள்தனமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாது.

யாா் முயற்சி செய்தாலும், உச்சநீதிமன்றமோ அல்லது காவிரி ஒழுங்காற்று ஆணையமாகக்கூட இருந்தாலும் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசால் அணை கட்ட முடியாது என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com