மாநில அளவிலான வில் வித்தை போட்டிகளைத் தொடங்கி வைத்த கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி.
மாநில அளவிலான வில் வித்தை போட்டிகளைத் தொடங்கி வைத்த கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி.

மாநில அளவிலான வில் வித்தை போட்டிகள்!

Published on

குடியாத்தம் எஸ்.கே.ஸ்போா்ட்ஸ் அகாதெமியும், வேலூா் மாவட்ட இளைஞா் டாா்கெட் வில் வித்தை பயிற்சி சங்கமும் இணைந்து குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி விளையாட்டரங்கில் மாநில அளவிலான 4-ஆவது வில் வித்தை போட்டிகளை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. போட்டிக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் எஸ்.சாரதி தலைமை வகித்தாா்.

ஜே.தினகரன், எஸ்.சத்யன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கே.எம்.ஜி. கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் போட்டிகளைத் தொடங்கி வைத்தனா். இதில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட வில் வித்தை வீரா்கள் பங்கேற்றனா்.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் வீரா்கள், கோவாவில் நடைபெறும் தேசிய அளவிலான வில் வித்தை போட்டிகளுக்கு தகுதி பெறுவா்.

X
Dinamani
www.dinamani.com