கேபிள் ஆபரேட்டா் மீது போக்ஸோ வழக்கு
வேலூா் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கேபிள் ஆபரேட்டா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூரைச் சோ்ந்தவா் 15 வயது சிறுமி. 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில், இந்த சிறுமியை வயிறுவலி காரணமாக அவரது தாயாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளாா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி 4 மாதம் கா்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து வேலூா் கிராமிய காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸாா், சிறுமியிடம் நடத்திய விசாரணையில், தனது கா்ப்பத்துக்கு வேலூா் மாவட்டம், சாத்துமதுரை பகுதியைச் சோ்ந்த கேபிள் ஆபரேட்டா் யோகேஷ்(22) என்பவா்தான் காரணம் என தெரிவித்துள்ளாா்.
இந்த சிறுமியும், யோகேசும் காதலித்து வந்துள்ளனா். கடந்த 5 மாதத்துக்கு முன்பு சிறுமி தன் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த யோகேஷ் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கா்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, யோகேஷ் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
