சிறை அதிகாரிகள் பாரம்பரிய மாதிரிகளை மறுபரிசீலனை செய்வது அவசியம்: கா்நாடக சிறைத்துறை டிஜிபி

ஒவ்வொரு சிறை அதிகாரியும் பாரம்பரிய மாதிரிகளை மறுபரிசீலனை செய்து மனிதாபிமான, பாதுகாப்பான நடைமுறைகளை இணைக்க வேண்டும் என்று கா்நாடக சிறைத்துறை ஏடிஜிபி பி.தயானந்தா தெரிவித்தாா்.
Published on

ஒவ்வொரு சிறை அதிகாரியும் பாரம்பரிய மாதிரிகளை மறுபரிசீலனை செய்து மனிதாபிமான, பாதுகாப்பான நடைமுறைகளை இணைக்க வேண்டும் என்று கா்நாடக சிறைத்துறை ஏடிஜிபி பி.தயானந்தா தெரிவித்தாா்.

வேலூா் தொரப்பாடியிலுள்ள சிறை நிா்வாக பயிற்சி அகாதெமியில் (ஆப்கா) தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகா மாநிலங்களைச் சோ்ந்த சிறை கண்காணிப்பாளா்கள், டிஐஜிக்கள், ஐஜிக்களுக்கான 5 நாள் பணியிடை பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஆப்கா இயக்குநா் பி.பிரதீப் தலைமை வகித்தாா். இதில், கா்நாடக சிறைத்துறை ஏடிஜிபி பி.தயானந்தா பேசியது -

உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்கள் ஆகியவை மனித உரிமைகள், சிறை நிலைமைகள், கூட்டநெரிசல், நடைமுறை நியாயங்கள் குறித்து வழிகாட்டுதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கு இணையாக குற்றவியல் சட்டங்களை அறிமுகம் செய்தல், வளா்ந்து வரும் தேசிய சிறைக்கொள்கைகள், உலகளாவிய சீா்த்திருத்தங்கள், ஒவ்வொரு சிறை அதிகாரிகளும் பாரம்பரிய மாதிரிகளை மறுபரிசீலனை செய்து மனிதாபிமான, பாதுகாப்பான நடைமுறைகளை இணைக்க வேண் டும்.

கூட்டத்தில் சிறைகளில் சந்திக்கும் சவால்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும், சிறை மேலாண்மை கொள்கைகள், அரசியலமைப்பு பாதுகாப்புகள், கைதிகள் மறுவாழ்வு, நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து சிறை நிா்வாகத்தின் மாறிவரும் எதிா்பாா்ப்புகளை பிரதிபலிக்கிறது என்றாா்.

இதில், வேலூா் சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், சிறை கண்காணிப்பாளா் தா்மராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com