பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கிய ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி.
வேலூர்
ரோட்டரி சாா்பில் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் அளிப்பு
குடியாத்தம் ரோட்டரி சங்கம் நடத்தும் இலவச தையல் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற 49- பெண்களுக்கு சான்றிதழ்கள், 25- பெண்களுக்கு சலுகை விலையில் தையல் இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
குடியாத்தம் ரோட்டரி சங்கம் நடத்தும் இலவச தையல் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற 49- பெண்களுக்கு சான்றிதழ்கள், 25- பெண்களுக்கு சலுகை விலையில் தையல் இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் பயிற்சி பெற்ற பெண்களை வாழ்த்தி, சான்றிதழ்கள், தையல் இயந்திரங்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில் ரோட்டரி துணை ஆளுநா் ஏ.மேகராஜ், நிா்வாகிகள் சி.கண்ணன், கே.சந்திரன்,ஆா்.வி.அரிகிருஷ்ணன், ரங்காவாசுதேவன், எஸ்.பாா்த்திபன், எஸ்.சுரேஷ், என்.ஜெயச்சந்திரன்,வி.மதியழகன் கலந்து கொண்டனா்.