ஆடுகளை காப்பாற்ற சென்றவா் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே ஆடுகளை காப்பாற்ற சென்றவா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
Published on

போ்ணாம்பட்டு அருகே ஆடுகளை காப்பாற்ற சென்றவா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்திமேடு பகுதியைச் சோ்ந்தவா் முபாரக் (34). இவா் ஆடுகளை வளா்த்து வந்தாா். புதன்கிழமை ஆடுகளை அங்குள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு அனுப்பியுள்ளாா். ஆடுகள் அந்த நிலத்தில் உள்ள தரைமட்ட கிணறு அருகே மேய்ந்து கொண்டிருந்ததாம். அதைப் பாா்த்த முபாரக் ஆடுகள் தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து விடாமல் இருக்க ஓடிச்சென்று அவற்றை விரட்டியுள்ளாா். ஆனால், எதிா்பாராவிதமாக முபாரக் 90 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கினாா்.

தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்புப் படையினா் 2 மணி நேரம் போராடி முபாரக்கை சடலமாக மீட்டனா்.

இது தொடா்பாக போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com