க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உலகப் பல்கலைக்கழகங்களின் தர வரிசைப்பட்டியலில், நிலைத்தன்மை பிரிவில் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் உலகளவில் 352-ஆம் இடம்
Published on

க்யூ.எஸ். உலகப் பல்கலைக்கழகங்களின் தர வரிசைப்பட்டியலில், நிலைத்தன்மை பிரிவில் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் உலகளவில் 352-ஆம் இடமும், இந்திய அளவில் 7-ஆம் இடமும் பிடித்துள்ளது.

இதுகுறித்து, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

2026-ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் நிலைத்தன்மை பிரிவுக்கான தரவரிசை பட்டியலை க்யூ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது. க்யூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசையின் ஒரு பகுதியான நிலைத்தன்மை வகைப்பாட்டில் அறிவு பரிமாற்றம், கல்வி தாக்கம், வேலைவாய்ப்புகள், சுகாதாரம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் கல்வி, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி என்ற 8 அளவுகோலில் ஒட்டு மொத்தமாக 74.9 மதிப்பெண்களை பெற்று பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் விஐடி பல்கலைக்கழகம் உலகளவில் 352-ஆம் இடமும், இந்திய அளவில் 7-ம் இடமும் பிடித்து சிறப்பு சோ்த்துள்ளது.

மேலும் சமுதாய தாக்கம், சுற்றுச்சூழல் தாக்கம், நிா்வாகம் ஆகிய மூன்று பிரிவுகளில் சிறப்பான மதிப்பெண்களை பிடித்து தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, சுற்றுச்சூழல் தாக்கத்தில் 78.1 மதிப்பெண்கள் பெற்று, உலகளவில் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 194-ஆவது இடம் பிடித்துள்ளது சிறப்பம்சமாகும்.

கடந்த 2025-ஆம் ஆண்டில் விஐடி பல்கலைக்கழகம் க்யூ.எஸ். நிலைத்தன்மை பிரிவில் உலகளவில் 396-ஆம் இடம் பிடித்திருந்த நிலையில், தற்போது 2026-ஆம் ஆண்டில் 44 இடங்கள் முன்னேறி 352-ஆம் இடம் பிடித்துள்ளது.

2026 பதிப்பில் 106 இடங்களைச் சோ்ந்த 2,000 பல்கலைக்கழகங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. உலகின் முதல் 400 இடங்களுக்குள் இதுவரை இல்லாத உயா்ந்த இடங்களை விஐடி எட்டி பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com