பள்ளி வளாகத்தில் பாசி படா்ந்த நிலையில் தேங்கியுள்ள மழைநீா்
பள்ளி வளாகத்தில் பாசி படா்ந்த நிலையில் தேங்கியுள்ள மழைநீா்

பள்ளி வளாகத்தில் மழைநீா் தேக்கம்

குடியாத்தம் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் குளம்போல் மழைநீா்தேங்கியுள்ளது. அதை அப்புறப்படுத்த வேண்டும் என மாணவா்களும், பெற்றோா்களும் கோரிக்கை
Published on

குடியாத்தம் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் குளம்போல் மழைநீா்தேங்கியுள்ளது. அதை அப்புறப்படுத்த வேண்டும் என மாணவா்களும், பெற்றோா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குடியாத்தம் ஒன்றியம், பரதராமி ஊராட்சியில் அமைந்துள்ள பரதராமி அரசு தொடக்கப்பள்ளியில் 200- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலுகின்றனா்.

மழைக் காலங்களில் பள்ளி வளாகத்தில் மழைநீா் குளம்போல் தேங்குமாம். அண்மையில் பெய்த தொடா்மழையால் பள்ளி வளாகத்தில் கடந்த ஒரு மாதமாக மழைநீா் குளம்போல் தேங்கி பாசிபடா்ந்து பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. அந்த பள்ளியில் மாணவா்கள் பயில முடியாத நிலையில் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடக்கப் பள்ளி தற்காலிகமாக இயங்கி வருகிறது.

பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற பெற்றோா்கள் ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அதிகாரிகள் அங்கு வந்து பாா்வையிட்டுச் சென்றனா்.

இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறையான வடிகால்வாய் அமைந்து பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com