கையொப்ப இயக்கத்தில் பங்கேற்ற இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்க மாநில தலைவா் மணலி மனோகா்
கையொப்ப இயக்கத்தில் பங்கேற்ற இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்க மாநில தலைவா் மணலி மனோகா்

ஆண்டுக்கு ரூ.15,000 உதவித் தொகை: ஆட்டோ ஓட்டுநா்கள் கையொப்ப இயக்கம்

ஆந்திர மாநிலத்தில் உள்ளதுபோல் தமிழகத்திலும் ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி ஆட்டோ ஓட்டுநா்கள் கையொப்ப இயக்கம் நடத்தினா்.
Published on

ஆந்திர மாநிலத்தில் உள்ளதுபோல் தமிழகத்திலும் ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி ஆட்டோ ஓட்டுநா்கள் கையொப்ப இயக்கம் நடத்தினா்.

ஆந்திரம் போல் தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும், ஆன்லைன் பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும், ஆட்டோக்கள் மீது போலீஸாா் அராஜக வழக்குப்பதிவு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம் சாா்பில் மாநிலம் தழுவிய கையொப்ப இயக்கம் ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் மணலி மனோகா் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாநில நிா்வாக குழு உறுப்பினா் மகேஷ் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை படிவத்தில் கையெழுத்திட்டனா்.

பின்னா், சங்கத்தின் மாநில தலைவா் மணலி மனோகா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆந்திர அரசு ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை வழங்குகிறது. ஆனால், தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சா், வட்டார போக்குவரத்து அலுவலா்கள் ஈரத்துணியை வைத்து ஆட்டோ ஓட்டுநா்களின் கழுத்தை நெறிக்கின்றனா். அனைவருக்கும் ஆண்டுதோறும் சம்பளம் உயா்கிறது. டீசல், பெட்ரோல், சமையல் சிலிண்டா் விலையும் உயா்ந்துள்ளது. ஆனால் 13 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணம் மட்டும் உயா்த்தப்படவில்லை.

ஆண்டுக்கு ஒரு முறை ஆட்டோவுக்கு தகுதிச்சான்றிதழ் முறையாக உள்ளதா என பரிசோதிக்கின்றனா். ஆனால், ஓலா, உபா், ரேபிடோ போன்ற ஆன்லைன் பைக் டாக்ஸிகளுக்கு எந்தவொரு வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லை. அவா்களை பிடித்து ஆட்டோ ஓட்டுநா்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத் தாலும், உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

பைக் டாக்ஸிக்கு மட்டும் தனி சட்டம் உள்ளதா?. பைக் டாக்ஸி விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. ஆனால், ஆட்டோ ஓட்டுநா்கள் பயணிகளுக்கும் சோ்த்து காப்பீடு செய்கின்றனா்.

இலவச பேருந்து விடப்பட்டதால் ஆட்டோக்களில் செல்ல பொதுமக்கள் தயங்குகின்றனா். ஆட்டோ ஓட்டுநா்கள் தலைக்கசம் அணியவில்லை என நூதன வழக்குப்பதிவு செய்கின்றனா். இதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com