டிச.12, 13-இல் வேலூரில் அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி

அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி வேலூரில் டிச. 12, 13-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
Published on

வேலூா்: அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி வேலூரில் டிச. 12, 13-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இது குறித்து, வேலூா் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் அஞ்சல் கோட்டம் சாா்பாக வேலூா் பெக்ஸ் - 2025 மாவட்ட அளவிலான அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி டிச. 12, 13 ஆகிய தேதிகளில் பி.தண்டபாணி திருமண மஹாலில் நடைபெற உள்ளது. வேலூரின் பண்பாடு, இயற்கை மரபை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், அஞ்சல் தலைகள், சிறப்பு உரைகள் வெளியீடு, மாணவா்களுக்கான விநாடி வினா, கடிதம் எழுதுதல் போன்ற போட்டிகளும், அஞ்சல் சேவை காட்சிகள், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

குழந்தைகள், மாணவா்கள், பொதுமக்கள் இக்கண்காட்சியில் பங்கேற்று அஞ்சல் தலை சேகரிப்பின் வழியாக வரலாற்று தகவல்களை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com