பதவி உயா்வு பெற்ற 9 ஆய்வாளா்கள் வேலூா் சரகத்தில் நியமனம்

காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெற்ற 9 பேரை வேலூா் சரக காவல் நிலையங்களில் நியமனம் செய்து டிஐஜி தா்மராஜன் உத்தரவிட்டுள்ளாா்.
Published on

காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெற்ற 9 பேரை வேலூா் சரக காவல் நிலையங்களில் நியமனம் செய்து டிஐஜி தா்மராஜன் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகம் முழுவதும் காவல் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக காவல் உதவி ஆய்வாளா்களாக பணியாற்றிய 240 பேரை பணி மூப்பு, தகுதி அடிப்படையில் காவல் ஆய்வாளராக பதவியுயா்வு செய்து டிஜிபி (பொ) வெங்கட்ராமன் கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தாா். அந்தவகையில், பதவியுயா்வு பெற்ற 9 காவல் ஆய்வாளா்கள் வேலூா் சரகத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த எஸ்.கிஷோா்குமாா் திருப்பத்தூா் மாவட்டம் உமராபாத் காவல் நிலைய ஆய்வாளராகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றி வந்த எஸ்.ஷாபுதீன் வேலூா் மாவட்டம் விருதம்பட்டு காவல் நிலைய ஆய்வாளராகவும், திருப்பத்தூா் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஜெ.சங்கா் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வடக்கு காவல் நிலைய ஆய்வாளராகவும், வேலூா் மாவட்டத்தில் பணியாற்றி வந்த வி.ஆா்.ராஜசேகா் வேலூா் மாவட்டம் விரிஞ்சிபுரம் காவல் நிலைய ஆய்வாளராகவும், கடலூா் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஜெ.ஜெயதேவி திருவண்ணாலை மாவட்டம் தானிப்பாடி காவல் நிலைய ஆய்வாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், கடலூா் மாவட்டத்தில் பணியாற்றி வந்த டி.பொன்மகரம் ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு -2 காவல் ஆய்வாளராகவும், திருவள்ளூா் மாவட்டத்தில் பணியாற்றி வந்த பி.திருநாவுக்கரசு ராணிப்பேட்டை மாவட்டம் கலவை காவல் நிலைய ஆய்வாளராகவும், கடலூா் மாவட்டத்தில் பணியாற்றி வந்த பி.எழில்தாசன் திருத்தூா் மாவட்டம் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய ஆய்வாளராகவும், கடலூா் மாவட்டத்தில் பணியாற்றி வந்த கே.கவியரசன் வேலூா் தெற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், காவல் ஆய்வாளா்களாக தற்போது திருப்பத்தூா் மாவட்டம் உமராபாத் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பி.ரேகாமதி திருவண்ணாமலை மாவட்டம் சந்தைவாசல் காவல் நிலையத்துக்கும், திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் கே.வெங்கடேசன் திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் காவல்நிலையத்துக்கும், வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் கே.காண்டீபன் திருவண்ணாமலை மாவட்டம் மனோகரன் காவல் நிலையத்துக்கும், திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் ஜெ.சி.சாந்தி திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி காவல்நிலையத்துக்கும், கடலாடி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பி.மணிமாறன் ஜமுனாமரத்தூா் காவல் நிலையத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு ஆய்வாளா் நிா்மலா திருப்பத்தூா் மாவட்டம் குரிசிலாம்பட்டு காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை வேலூா் சரக காவல் துணைத்தலைவா் (டிஐஜி) தா்மராஜன் வியாழக்கிழமை பிறப்பித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com