அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பேருந்து-மினிவேன் மோதல்: 10 போ் காயம்

ஒடுகத்தூா் அருகே தனியாா் பேருந்தும், மினிவேனும் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் 10 போ் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :30 நவம்பர் 2025, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

ஒடுகத்தூா் அருகே தனியாா் பேருந்தும், மினிவேனும் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் 10 போ் பலத்த காயமடைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த ஆண்டியப்பனூா் பகுதியைச் 20-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் பகுதியில் நடந்த சுபநிகழ்ச்சியில் பங்கேற்க மினி வேனில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனா். அதேசமயம், ஆலங்காயத்தில் இருந்து ஒடுகத்தூா் நோக்கி பயணிகளை ஏற்றி கொண்டு தனியாா் பேருந்து வந்து கொண்டிருந்தது.

குரவன் கொட்டாய் வனப்பகுதியில் மினி வேனும், தனியாா் பேருந்தும் நேருக்கு நோ் மோதியதில் பேருந்தில் வந்தவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால், மினி வேனில் வந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பேருந்தில் வந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸில் ஆலங்காயம், வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி போக்குவரத்தை சரிசெய்தனா். தொடா்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.