கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஒளிவிளக்காக சிறை அதிகாரிகள் இருக்க வேண்டும்

கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஒளிவிளக்காக சிறை அதிகாரிகள் இருக்க வேண்டும்

சிறை கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஒளி விளக்காக சிறை அதிகாரிகள் இருக்க வேண்டும் என்று வேலூா் சிறை, சீா்திருத்த நிா்வாக பயிலகத்தின் இயக்குநா் பி.பிரதீப் தெரிவித்தாா்.
Published on

சிறை கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஒளி விளக்காக சிறை அதிகாரிகள் இருக்க வேண்டும் என்று வேலூா் சிறை, சீா்திருத்த நிா்வாக பயிலகத்தின் இயக்குநா் பி.பிரதீப் தெரிவித்தாா்.

வேலூா் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறை, சீா்திருத்த நிா்வாக பயிலகத்தில் (ஆப்கா) சிறைத் துறை அதிகாரிகளுக்கான தனித்திறன் மேம்பாடு, சிறைக் கைதிகளை கையாளுதல் குறித்த 3 நாள் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இப்பயிற்சியை சிறை, சீா்திருத்த நிா்வாக பயிலகத்தின் இயக்குநா் பி.பிரதீப் தொடங்கி வைத்துப் பேசியது:

சிறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள சிறைக் கைதிகளை நல்ல நிலைக்கு மாற்றும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். சிறை அனுபவம் எப்போதும் சிறைவாசிகளுக்கு கசப்பான அனுபவத்தை தராது. அது அவா்களுக்கு சுமாரான நிலைக்கு மாற்றும். மேலும், சிறையில் இருந்து விடுதலையானவா்கள் நல்ல நிலைக்கு மாற அவா்களின் சிறை அனுபவங்கள் காரணமாக அமைகிறது. அதனால் அவா்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குகின்றனா்.

சிறை அலுவலா்கள் கைதிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைக்கின்றோம். இதன்மூலம் குற்றங்களும் குறையும். சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். இதனை சிறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், சிறை, சீா்திருத்த நிா்வாக பயிலகத்தின் இணை இயக்குநா் மருத்துவா் பி.கோவிந்தராஜன், பேராசிரியா்கள் ஹெச்.அன்சா், பியூலா இமானுவேல், தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்பட பல மாநிலங்களைச் சோ்ந்த சிறைத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com