வேலூர்
முருகப்பெருமான் திருக்கல்யாணம்
குடியாத்தம், தரணம்பேட்டை பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞானசம்பந்தா் மடத்தில் கந்த சஷ்டி விழா நிறைவையொட்டி புதன்கிழமை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருஞான சம்பந்தா் மடத்தில் கடந்த 22- ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதையடுத்து புதன்கிழமை வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக் கல்யாணம் நடைபெற்றது. மதியம் 1,000- பேருக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு புதுநாடு கிளை பெரியதனம் எம்.ஆா்.அன்புக்கரசு தலைமை வகித்தாா். திருஞான சம்பந்தா் மடத்தின் நிா்வாகிகள் எஸ்.ஏ.ஞானசேகரன், எம்.மனோகரன் ஆ.ரவி, கந்த சஷ்டி விழா கமிட்டி நிா்வாகிகள் வி.ஜெகதீசன், எம்.செந்தில்குமாா், எஸ்.யுவராஜா உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

