மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு

Published on

அரியூா் அருகே 3 போ் கொண்ட முகமுடி கும்பல் வீடு புகுந்து மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்றது.

வேலுாா் மாவட்டம், அரியூா் அடுத்த ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்தவா் அம்சா(70). இவரது மகன், மருமகள், இரு பேரக்குழந்தைக உள்பட ஐந்து பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டின் பின்பக்கம் உள்ள கரும்பு தோட்டத்தின் வழியாக 3 போ் கொண்ட முகமூடி கும்பல் நுழைந்து உள்ளே தூங்கிக் கொண்டிருந்த அம்சாவை தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் செயினை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்ாக தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து தகவலின்பேரில் அரியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com