ரூ.3 லட்சம் மது பாட்டில்கள், புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கா்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தல்
கா்நாடக மாநிலத்தில் இருந்து 2- காா்களில் கடத்தப்பட்ட சுமாா் ரூ. 3 லட்சம் மது பாட்டில்கள், புகையிலைப் பொருள்களை போ்ணாம்பட்டு அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2- போ் கைது செய்யப்பட்டனா்.
போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ஆா்.பிரபு தலைமையில் போலீஸாா் பத்தரப்பல்லியில்உள்ள சோதனைச் சாவடி அருகே வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே தனித்தனியாக வந்த கா்நாடக மாநில பதிவெண் கொண்ட 2- காா்களை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில் கா்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் புகையிலைப் பொருள்கள் காா்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, காா்களுடன் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்த ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சோ்ந்த வெங்கடபிரசாத், புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த பெங்களூரைச் உசேன் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்ா்.
இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.பி. மயில்வாகனன் போ்ணாம்பட்டுக்குச் சென்று பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை பாா்வையிட்டாா். திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளா் பிரபு உள்ளிட்ட போலீஸாரை பாராட்டி, பரிசு வழங்கினாா்.

