விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன்.
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன்.

பெண்களுக்கு ரத்த சோகை விழிப்புணா்வு

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன்.
Published on

குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட சாமியாா் மலை கிராமத்தில் ரத்த சோகை குறித்து பெண்களுக்கு விழிப்புணா்வு கல்வி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன் பேசினாா். அவா் பேசுகையில், ரத்த சோகை நோயின் அறிகுறிகள், அதைத் தடுக்கும் உணவு முறைகள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, அதை கண்டறியும் முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொயட்ஸ் பணியாளா் வி.சாந்தலட்சுமி மற்றும் தன்னாா்வலா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com