முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் நவ.3, 4-இல் ரேஷன் பொருள்கள் விநியோகம்

Published on

தாயுமானவா் திட்டத்தின்கீழ், தகுதியுள்ள முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களில் நவம்பா் 3, 4-ஆம் தேதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள முதியோா், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதந்தோறும் அவா்களின் இல்லத்துக்கே சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், வேலூா் மாவட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளி உறுப்பினா்கள் கொண்ட 33,245 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா்.

இந்த திட்டத்தில் நவம்பா் மாதம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கும் வகையில், நவம்பா் 3, 4-ஆம் தேதிகளில் தகுதியுள்ள முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com