பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைன் இயந்திரத்துடன், ராஜ்குமாா்.
வேலூர்
வனப் பகுதியில் மண் சாலையை சமன் செய்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைன் இயந்திரத்துடன், ராஜ்குமாா்.
குடியாத்தம் அருகே அனுமதியின்றி வனப் பகுதியில் மண் சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
குடியாத்தம் வனச் சரக அலுவலா் என்.பிரதீப்குமாா் தலைமையில், வனவா்கள் சுப்பிரமணியன், கே.தேன்மொழி, வனக் காப்பாளா்கள் கே.புவனேஸ்வரி, ஜி.சக்திவேல் ஆகியோா் சைனகுண்டா வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை களத் தணிக்கை மேற்கொண்டிருந்தனா். அப்போது சேங்குன்றத்தைச் சோ்ந்த ராஜ்குமாா், தனது நிலத்துக்கு செல்ல வனப் பகுதியில்உள்ள மண் சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பொக்லைன் இயந்திரத்துடன், ராஜ்குமாரை அலுவலகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக மாவட்ட வன அலுவலா் ஆலோசனையின்பேரில், ராஜ்குமாருக்கு ரூ. 1 லட்சம் அபதாரம் விதிக்கப்பட்டது.

