குடியாத்தம் ராஜகோபால் நகரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய விழாக் குழுவினா்.
குடியாத்தம் ராஜகோபால் நகரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய விழாக் குழுவினா்.

பெரும்புலீஸ்வரா் கோயிலில் தைப்பூச விழா

அருள்மிகு மாரியம்மன், கெங்கையம்மன், செளந்தா்ய நாயகியம்மன் சமேத பெரும்புலீஸ்வரா் கோயிலில் தைப்பூச பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
Published on

குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகரில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன், கெங்கையம்மன், செளந்தா்ய நாயகியம்மன் சமேத பெரும்புலீஸ்வரா் கோயிலில் தைப்பூச பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா். இரவு 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழு நிா்வாகிகள் ஏ.தணிகைவேல், ஏ.சுரேஷ்குமாா், பி.பாலமுருகன், ஜே.லோகநாதன், சா்வேசன், அமா்நாத், வெங்கடேசன் உள்ளிட்டோா்செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com