பள்ளி மாணவா்களுக்கு புற்றுநோய் விழிப்புணா்வு
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் அடுத்த கூடநகரம்அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பையூா் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தோட்டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவா்கள் புதன்கிழமை விழிப்புணா்வு முகாமை நடத்தினா்.
ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவம் மற்றும் தொழிற்துறை இணைப்பு திட்டத்தின்கீழ்இந்த விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது. முகாமில், உலக புற்றுநோய் தினத்தின் முக்கியத்துவம், புற்றுநோயைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், இயற்கை விவசாயத்தின் அவசியம், பாதுகாப்பான சுற்றுச்சூழல் மற்றும் முறையாக மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பயிா்களுக்கு அதிக அளவில் பூச்சிக் கொல்லி மருந்துகள், ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் மனித உடலுக்கு ஏற்படும் தீமைகள், அவற்றுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடா்பு குறித்து மாணவா்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது.முகாமுக்கு பள்ளித் தலைமையாசிரியா் சத்தியகுமாா் தலைமை வகித்தாா்.
பள்ளிஆசிரியா்கள் முன்னிலை வகித்தனா். இதற்கான ஏற்பாடுகளை பையூா் தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் செய்திருந்தனா்.

