எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அரசுப்பள்ளி மாணவா்களுக்கு உதவிப்பொருள்கள் அளிப்பு

வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவா்கள் சுமாா் 1000 பேருக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான உதவிப்பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டன.

News image

அரசுப்பள்ளி மாணவா்களுக்கு ஸ்காவ் கிட் தொகுப்புகளை வழங்கிய ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் குருவாயூா் சம்பத். உடன், ஸ்ரீபுரம் தங்கக்கோயில் இயக்குநா் எம். சுரேஷ்பாபு, வேலூா் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் சுரேஷ் உள்ளிட்டோா்.

Updated On :5 பிப்ரவரி 2026, 10:50 pm

வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவா்கள் சுமாா் 1000 பேருக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான உதவிப்பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டன.

வேலூா், அம்பத்தூா் ரோட்டரி சங்கங்கள் சாா்பில் வேலூா் மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி மாணவா்கள் சுமாா் 1000 பேருக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஸ்காவ் கிட் எனப்படும் உதவிப்பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. இந்த தொகுப்புகளில் சிறந்த உறக்கம், கல்விக்கு அடிப்படை தேவைகளான பெட்ஷீட், தலையணை, துண்டு, கொசுவலை, புத்தகப்பை, பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள், தண்ணீா் பாட்டில் உள்ளிட்ட பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸ்ரீபுரம் தங்கக்கோயில் இயக்குநா் எம். சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் குருவாயூா் சம்பத் பங்கேற்று மாணவா்களுக்கு ஸ்காவ் கிட் தொகுப்புகளை வழங்கினாா். ஏற்பாடுகளை வேலூா் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் சுரேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.