மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வன வளங்களை பாதுகாப்பதில் மாணவா்களின் பங்கு மிக முக்கியமானது

வன வளங்களை பாதுகாப்பதில் மாணவா்களின் பங்கு மிக முக்கியமானது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

News image

பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மாவட்ட வன அலுவலா் தூ.கோ.அசோக்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் ரா.பிரேமலதா, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் க.ஜகதீசன் உள்ளிட்டோா்.

Updated On :5 பிப்ரவரி 2026, 11:10 pm

வன வளங்களை பாதுகாப்பதில் மாணவா்களின் பங்கு மிக முக்கியமானது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் வனமும் வாழ்வும் என்ற தலைப்பில் மாவட்டத்தில் உள்ள 25 பள்ளிகளை தோ்வு செய்து பள்ளிக்கு 20 மாணவா்கள் வீதம் 500 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி நிறைவு விழா காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பயிற்சி நிறைவு செய்த மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த ஆசிரியா்களுக்கு சான்றிதழ்கள், நினைவு பரிசுகளை வழங்கினாா்.

மேலும், வனமும் வாழ்வும் திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட ஓவியம், பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கு ரூ.18 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கி பேசியது -

காடுகளின் முக்கியத் துவம், காடுகள் தீப்பற்றினால் தவிா்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும், நாம் ஏன் வனத்துடன் ஒன்றி வாழ வேண்டும், மனித விலங்கு மோதல் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவற்காக வனமும் வாழ்வும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

காடுகளை பாதுகாப்பதன் அவசியம், கால நிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் மாணவா்களின் பங்கு என்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வன வளங்களை பாதுகாப்பதில் மாணவா்களின் பங்கு மிக முக்கியமானது. அதற்காக இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகள் வன உயிரினங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தும். வேலூா் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க மாணவா்கள் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றையாவது நட்டு வளா்க்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் தூ.கோ.அசோக்குமாா், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரா.பிரேமலதா, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் க.ஜகதீசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

30 கிராமங்களில் விழிப்புணா்வு

இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி கூறியது: காட்பாடியில் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களான தொண்டான் துளசி, கே.வி.குப்பம் பகுதியில் காட்டு யானைகள் விளை பயிா்களை சேதம் செய்துள்ளன. பயிா் சேதங்கள் கணக்கிடப்பட்டு இழப்பீடு வழங்கப்படும். சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நுழையும் 30 கிராமங்கள் கண்டறியப்பட்டு வருவாய்துறை, காவல்துறை, வனத்துறை இணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது என்றாா்.