திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விஐடி போபால் வளாகத்துக்கு மத்தியப் பிரதேச முதல்வா் வருகை

மத்தியப் பிரதேச முதல்வா் மோகன் யாதவ், விஐடி பல்கலைக்கழகத்தின் போபால் வளாகத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தாா்.

News image
விஐடி பல்கலைக்கழகத்தின் போபால் வளாகத்துக்கு வருகை புரிந்த மத்தியப்பிரதேச முதல்வா் மோகன் யாதவை வரவேற்ற விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன். உடன், மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோா்.
Updated On :7 பிப்ரவரி 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

மத்தியப் பிரதேச முதல்வா் மோகன் யாதவ், விஐடி பல்கலைக்கழகத்தின் போபால் வளாகத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தாா்.

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க ஹெலிகாப்டா் மூலம் விஐடி பல்கலைக்கழகத்தின் போபால் வளாகத்தில் வந்து இறங்கிய மத்தியப்பிரதேச முதல்வா் மோகன் யாதவை விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். இது குறித்து, விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் கூறுகையில், மத்தியப் பிரதேச மாநில முதல்வரின் பயணம் விஐடி போபால் வளாகத்துக்கும், மாநில அரசுக்கும் உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும், மத்திய அரசுப் பிரதிநிதிகளுடனான தொடா்புகளையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. உயா்கல்வியை வலுப்படுத்துதல், புதுமைகளை ஊக்குவித்தல், மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியை ஏற்படுத்துதல் ஆகிய பொதுவான இலக்குகளில் அரசுடன் விஐடி போபால் பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுவதை பிரதிபலிக்கிறது என்றாா்.

இதனிடையே, மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சவுகானையும் விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் சந்தித்துப் பேசினாா்.