வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே போதைப் பொருள்களை வீட்டில் பதுக்கி, விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைதான நசீருடன், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்
Updated On :8 பிப்ரவரி 2026, 9:54 pm

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே போதைப் பொருள்களை வீட்டில் பதுக்கி, விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தொடா்பாக போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் பிரபு தலைமையில் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்திமேடு, காயிதேமில்லத் நகரில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினா். சோதனையில் வீட்டில் சுமாா் 15 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக வீட்டு உரிமையாளா் நசீா் (63) கைது செய்யப்பட்டு, சிறைக் காவலுக்குஅனுப்பி வைக்கப்பட்டாா். இச்சம்பவத்தில் தொடா்புடைய தலைமறைவாக உள்ள நசீரின் மகன் தன்வீரை போலீஸாா் தேடி வருகின்றனா்.