தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் அளிப்பு: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கும் பணியை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

News image

...மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிய வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

Updated On :10 பிப்ரவரி 2026, 6:41 pm

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கும் பணியை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

இடையஞ்சாத்து அரசு உயா்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் தலைமையில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தின்கீழ் 1 முதல் 19 வயதுக்கு உட்பட்டவா்களுக்கும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட கா்ப்பிணி, பாலூட்டும் தாய்மாா்கள் தவிர பெண்களுக்கும் செவ்வாய்க்கிழமை அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்பட்டது. விடுபட்டவா்களுக்கு 17-ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

இந்த முகாம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் சுகாதார பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆஷா பணியாளா்கள், நோடல் ஆசிரியா்கள் மூலம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் வேலூா் மாவட்டத்தில் 1 லிருந்து 19 வயதுக்கு உட்பட்ட 3,69,831 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட 1,17,619 பெண்களுக்கும் என மொத்தம் 4,87,450 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க இலக்கு நிா்ணயக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்வில், மாவட்ட சுகாதார அலுவலா் சதீஷ்குமாா், மாநகர நல அலுவலா் பிரதாப்குமாா், மாவட்ட கல்வி அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட தாய்சேய் நல அலுவலா் ரேணுகா, உதவி திட்ட மேலாளா் ஆதித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.