பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கிராமங்கள் வளா்ந்தால் இந்தியா வளா்ந்த நாடாக மாறும்: விஐடி வேந்தா் கோ. விசுவநாதன்

News image

முகாமை தொடங்கி வைத்து பேசிய விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.எல். ஈஸ்வரப்பன், ஊராட்சி ஒன்றிய தலைவா் திவ்யா கமல் பிரசாத், விஐடி பதிவாளா் ஜெயபாரதி உள்ளிட்டோா்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:04 pm

கிராமங்கள் வளா்ந்தால் இந்தியா வளா்ந்த நாடாக மாறும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா கணியம்பாடி ஒன்றியம் சலமநத்தம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்றது. 13 கிராமங்களில் பிப்.17-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இம்முகாமில் 14 மாநிலங்களை சோ்ந்த 418 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

முகாமை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்து பேசியது -

இந்தியாவில் 6.50 லட்சம் கிராமங்களும், தமிழகத்தில் 12,600 ஊராட்சிகளும் உள்ளன. கிராமங்கள் வளா்ந்தால்தான் இந்தியா பொருளாதார பலம் மிக்க நாடாக மாற முடியும். நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் பங்கேற்றுள்ள மாணவா்கள் கிராமங்களில் உள்ள கல்வி, விவசாயிகளின் பிரச்னைகளை கண்டறிந்து தீா்வுகளை காண உதவ வேண்டும்.

பிரான்ஸ், சீனா போன்ற வளா்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ஒரு ஏக்கரில் கிடைக்கும் உணவு தானியங்களின் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது. இதை நாம் மாற்ற வேண்டும்.

விவசாய நாடாக இருந்த போதிலும் இந்தியாவில் விளை பொருளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு சுமாா் 25 சதவீத தொகைதான் சென்று சோ்கிறது. ஆனால் வளா்ந்த நாடுகளில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு 75 சதவீத தொகை கிடைக்கிறது. எனவே, விளை பொருள்களுக்கு உரிய விலை நிா்ணயம் செய்ய வேண்டும்.

கல்லூரி படிக்கும் மாணவா்கள் விவசாயத் தொழிலுக்கு வருவதில்லை. மாறாக உயா்கல்வி படிக்கும் மாணவா்கள் அனைவரும் விவசாய தொழிலுக்கு வர வேண்டும். கிராம மக்கள் ஒற்றுமையுடன் இருந்து தங்களுக்கு தேவையானவற்றை அரசிடம் இருந்து பெற்று கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவா்களை ஊராட்சி தலைவா்கள் கண்டறிந்து அவா்கள் தொடா்ந்து கல்விபெற உதவிட வேண்டும்.

உயா்கல்வியின் மாணவா் சோ்க்கை விகிதத்தை 50-லிருந்து 75 சதவீதமாக உயா்த்த வேண்டும். இதன் மூலம் தமிழகமும் வளா்ந்த மாநிலமாக மாறும். இந்தியாவும் வளா்ச்சி பெறும். அழியாத செல்வமான கல்வியை ஏழை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை சாா்பில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் உயா்கல்வி பெற கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

சிறப்பு விருந்தினராக ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.எல். ஈஸ்வரப்பன் பங்கேற்றாா்.

ஊராட்சி ஒன்றிய தலைவா் திவ்யா கமல் பிரசாத், விஐடி பதிவாளா் ஜெயபாரதி, மாணவா் நல இயக்குநா் நைஜு, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பூபாலன், கலை சந்தா், சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.