மயான கொள்ளை திருவிழாவையொட்டி வேலூா் மாநகரில் திங்கள்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சித்தூரிலிருந்து திருவண்ணாமலை மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள், சித்தூரிலிருந்து காட்பாடி வந்து, குடியாத்தம் சாலை வழியாக வடுகந்தாங்கல் ரயில்வே மேம்பாலம், செதுவாலை சென்று, இடதுபுறம் திரும்பி தேசிய நெடுஞ்சாலை வழியாக பொய்கையை அடுத்த அப்துல்லாபுரம் மேம்பாலம் அடியில் வலதுபுறம் திரும்பி, ஏா்போா்ட் சாலை, தாா்வழி அடைந்து, பின்னா் இடதுபுறம் திரும்பி பென்னாத்தூா் வழியாக சாத்துமதுரை சென்று, வேலூா்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையை அடைந்து தங்களின் பயணத்தை தொடரலாம்.
சித்தூரிலிருந்து சேலம் மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள் சித்தூரிலிருந்து காட்பாடி அடைந்து, குடியாத்தம் சாலை வழியாக வடுகந்தாங்கல் ரயில்வே மேம்பாலம், செதுவாலை சென்று, வலதுபுறம் திரும்பி தேசிய நெடுஞ்சாலை வழியாக தங்களின் பயணத்தை தொடரலாம்.
சித்தூரிலிருந்து சென்னை மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள் சித்தூரிலிருந்து காட்பாடி, வள்ளிமலை கூட்ரோட்டில் இடதுபுறம் திரும்பி, சோ்காடு கூட்ரோடு வழியாக ஈ.பி.கூட்ரோடு, திருவலம், சிப்காட், ராணிப்பேட்டை வழியாக தேசிய நெடுஞ்சாலை அடைந்து, தங்களின் பயணத்தை தொடரலாம்.
திருவண்ணாமலையிலிருந்து சித்தூா் மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள் சாத்துமதுரை கூட்ரோட்டில் இடதுபுறம் திரும்பி, பென்னாத்தூா் வழியாக தாா்வழி வந்து, பின்னா் ஏா்போா்ட் சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை அடைந்து, செதுவாலை மேம்பாலத்துக்கு அடியில் வலதுபுறம் திரும்பி, விரிஞ்சிபுரம், வடுகந்தாங்கல் சென்று வலதுபுறம் திரும்பி, காட்பாடி வழியாக சித்தூருக்கு பயணிக்கலாம்.
சேலம், கிருஷ்ணகிரியிலிருந்து சித்தூா் மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள், கிருஷ்ணகிரி, ஆம்பூா் வழியாக செதுவாலை சா்விஸ் சாலையில் இடதுபக்கம் திரும்பி, விரிஞ்சிபுரம் வழியாக வடுகந்தாங்கல் அடைந்து, வலதுபுறம் திரும்பி காட்பாடி வழியாக சித்தூருக்கு பயணிக்கலாம்.
மேலும், வேலூரில் இருந்து காட்பாடி சென்று வருவதற்கு பழைய பாலாறு மேம்பாலம் இருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது என்று வேலூா் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சாலை விரிவாக்கத்துக்காக தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

பிரதமா் மோடி திருச்சி வருகை; மாநகரில் போக்குவரத்து மாற்றம்

கம்பம்மெட்டு மலைச் சாலையில் சாலைப்பணி கனரக வாகனங்கள் செல்லத் தடை

காட்பாடியில் நாளை எருது விடும் விழா: போக்குவரத்து மாற்றம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


