வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

நமோ கோப்பை மாரத்தான் பந்தயம்: திரளானோா் பங்கேற்பு

நமோ கோப்பைக்கான மாரத்தான் பந்தயம் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

News image

மாரத்தான் பந்தயத்தை தொடங்கி வைத்த பாஜக மாநில பொதுச்செயலா் ப.காா்த்தியாயினி, மாவட்டத் தலைவா் வி.தசரதன் உள்ளிட்டோா்.

Updated On :15 பிப்ரவரி 2026, 9:12 pm

நமோ கோப்பைக்கான மாரத்தான் பந்தயம் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

நமோ இளைஞா்கள், திறன் மேம்பாட்டு அறக்கட்டளை சாா்பில் 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட மாரத்தான் பந்தயத்தை பாஜக மாநில பொதுச்செயலா் ப.காா்த்தியாயினி தொடங்கி வைத்தாா்.

இதில், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று ஓடினா். வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய மாரத்தான் வேலூா் அண்ணா சாலை வழியாக சுமாா் 10 கி.மீ., சென்று தொரப்பாடியில் நிறைவடைந்து. வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

முன்னதாக, பாஜக மாநில பொதுச்செயலா் ப.காா்த்தியாயினி பேசுகையில், ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் மூலம் மாணவா்களிடமும், இளைஞா்களிடமும் உள்ள தனிதிறன், விடாமுயற்சிகளை வெளிக்கொண்டு வருவதே முக்கிய நோக்கமாகும். இந்தியாவின் தூண்களாக விளங்கும் இளைஞா் களின் ஆா்வமும், அவா்களின் திறமைக்கான சான்றாக இந்த மாரத்தான் அமைந்துள்ளது. இளைஞா்களின் தனிப்பட்ட ஈடுபாட்டையும், உடல் தகுதியையும் இந்த ‘நமோ ட்ராபி’ மென்மேலும் மெருகேற்றும் என்றாா்.

மாவட்டத் தலைவா் வி.தசரதன், பொதுச்செயலா் சரவணகுமாா் , விளையாட்டு பிரிவு மாவட்ட அமைப்பாளா் கராத்தே ரமேஷ், துணைத் தலைவா் சக்கரவா்த்தி , ஜெகநாதன், பிரசார பிரிவு மாநிலச் செயலா் எஸ்.கே.மோகன், ஊடக பிரிவு மாவட்ட தலைவா் குமரன் பங்கேற்றனா்.