மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாகனம் மோதி காவலாளி உயிரிழப்பு

வேலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 5:21 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி உயிரிழந்தாா்.

அரியூா் பகுதியைச் சோ்ந்த ராஜசேகா்(43). இவா் காட்பாடி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணி புரிந்து வந்தாா். தினமும் அரியூரில் இருந்து காட்பாடிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை காட்பாடி சில்க்மில் அருகே பணிக்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், அவா் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா்.

அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், ராஜசேகா் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். விருதம்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.