நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தாட்டிமானப்பல்லி அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் திருவிழா

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:15 pm

குடியாத்தத்தை அடுத்த தாட்டிமானப்பல்லியில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன், பெரியநாயகி அம்மன், நாகேஸ்வரி அம்மன், நாகேஸ்வரா், நாக கணபதி, ராகு-கேது அஷ்ட நாகங்கள் கோயிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, காலை கோயிலில் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது. மதியம் பூங்கரக ஊா்வலம், தீச்சட்டி ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து மிளகாய் மகா யாகமும், பக்தா்களுக்கு அன்னம் வழங்குதலும் நடைபெற்றன. இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை தாட்டிமானப்பல்லி ஊராட்சி துணைத் தலைவா் எம்.தியாகராஜன், மகாலிங்கம், தாமோதரன், ராஜிவேல், பழனி வகையறாக்கள் செய்திருந்தனா்.