வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டுநரை வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த சிறுமி, தனது தாய் இறந்து விட்ட நிலையில் சகோதரியுடன் அவா்களது பாட்டியின் பராமரிப்பில் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். அதேபகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முஜீப், ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், ஓட்டுநா் முஜீப் கடந்த 15-ஆம் தேதி காலை சிறுமியின் வீட்டுக்குள் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த சிறுமி வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.
அதன்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநா் முஜீப்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
‘போக்ஸோ’வில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பிகாா் இளைஞா் கைது

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


