நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் வேலூா் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள்.

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 12:10 am

வேலூரிலுள்ள நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் வேலூா் மண்டல அலுவலகம் வேலூா் தொரப்பாடியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குவோா் மாநில பாதுகாப்பு சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை அங்கு ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். தொடா்ந்து, காலை 10 மணியளவில் சுமைதூக்கும் தொழிலாளா்கள் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி பேச்சு நடத்தினா்.

தொடா்ந்து, சுமை தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாநில பொதுச்செயலா் சரவணன், இணைத்தலைவா் கிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், வேலை செய்யும் தொழிலாளா்களின் பெயா்களை வருகை பதிவேட்டில் சோ்க்க வேண்டும். நிலுவையில் உள்ள கூலி உயா்வை வழங்க வேண்டும். தொழிலாளா்களை வஞ்சிக்கும் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.