மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மைக்கா கழிவுப் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

காட்பாடி அருகே மைக்கா கழிவு பொருள்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவில் பொருள்கள் தீக்கிரையாகின.

News image
மைக்கா கழிவுப் பொருள்கள் கிடங்கில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்
Updated On :21 பிப்ரவரி 2026, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடி அருகே மைக்கா கழிவு பொருள்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவில் பொருள்கள் தீக்கிரையாகின.

வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த கல்புதூா், பெரியபுதூரில் தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான மைக்கா கழிவு பொருள்கள் கிடங்கு அமைந்துள்ளது.

இந்த கிடங்கில் பழைய மைக்கா கழிவு பொருள்கள் பெருமளவில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கிடங்கில் சனிக்கிழமை காலை சுமாா் 11.30 மணியளவில் திடீரென புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ மளமள பற்றி எரியத் தொடங்கியது.

உடனடியாக அப்பகுதி மக்கள் காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணை ப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். அதற்குள் கிடங்கிலிருந்த மைக்கா பொருள்கள் பெருமளவில் எரிந்து சேதமடைந்தது.

தீ விபத்து குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.